மூணு வருசமா இழுத்தடிக்கிறார் லீனா மணிமேகலை; சம்மன் அனுப்பினால் கூட ஆஜராக மாட்டார் - சுசிகணேசன் தரப்பு வாதம்

 
sஉ


இயக்குநர் சுசி கணேசன் மீதான மீடூ புகார் வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் லீனா மணிமேகலை.   இதை அடுத்து வழக்கின் மறு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார் நீதிபதி.

சுசி கணேசன் மீது பாலியல் அத்துமீறல் புகார் அளித்திருந்தார் .   மீடூ மூலமாக கவிஞர் லீனா மணிமேகலை இந்த புகாரினை சொல்லி இருந்தார்.  தன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாக இயக்குநர் சுசி கணேசன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  அவதூறு வழக்கு விசாரணை நடைமுறையில் தவறு இருப்பதாக சொல்லி வேறு மாஜிஸ்ட்ரேட்டுக்கு மாற்றி உத்தரவிட கோரினார் வீணா மணிமேகலை.

லே

அந்த வழக்கை விசாரித்து சென்னை அமர்வு நீதிமன்றம் லீனா மணிமேகலை சொன்ன குற்றச்சாட்டுக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்று சொல்லி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.    இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.   இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது சுசி கணேசன் தரப்பில்,   கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக லீனா மணிமேகலை இந்த வழக்கின் விசாரணையை இழுத்து அடித்து வருகிறார்.  நான்கு மாதத்தில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சொல்லி சுசி கணேசன் தரப்பு வாதிட்டது.

அப்போது,   காளி ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை விவகாரத்தில் டெல்லி , உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் இந்தியா பாதுகாப்பு இல்லாத நாடு  என்றும்,   இந்திய சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் லீனா மணிமேகலை சொன்னதை சுட்டிக்காட்டிய சுசி கணேசன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றம் சம்மன்  அனுப்பினால் கூட லீனா மணிமேகலை ஆஜராக மாற்றார் என்று வாதிட்டார்.

 இதை அடுத்து வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக லீனா மணிமேகலை தனது தம்பி பெயரில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்ததை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் மறு விசாரணையினை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்.