பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தாயார் புஷ்பா காலமானார்..

 
மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மனைவி புஷ்பா காலமானார்..

 

மறைந்த நடிகர் ஐசரி வேலனின்  மனைவியும், ஐசரி கணேஷின்  தாயாருமான புஷ்பா காலமானார்.  

திரைப்பட நடிகர் , அரசியல்வாதி, தமிழக  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என பன் முகங்களைக் கொண்டவர் ஐசரி வேலன்.   1970 ஆம் ஆண்டு ‘எங்க மாமா’ எனும் சிவஜி படம் மூலம் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர், எம்.ஜி.ஆர் உடனே அதிக படங்கள் நடித்திருந்தார். அதிமுக தொடங்கப்பட்டு, அக்கட்சி சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே போட்டியிட்ட அவர், வெற்றியும் பெற்றார்.  தொடர்ந்து அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மனைவி புஷ்பா காலமானார்.. 

அதேபோல் அவரது மகன் ஐசரி கே. கணேஷும் பல துறைகளில் சாதித்திருக்கிறார்.  சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவி, அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். பல திரைப்படங்களை தயாரித்துள்ள ஐசரி கணேஷ் , வேல்ஸ் கல்வி அறக்கட்டளை சார்பில்  நிறைய உதவிகளையும் செய்து வருகிறார்.  

மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மனைவி புஷ்பா காலமானார்..

இந்த நிலையில், தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் தாயாருமான திருமதி. புஷ்பா ஐசரி வேலன் (75) அவர்கள் இன்று (14/07/2022) காலை 9:30 மணி வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். அம்மா அவர்களின் இறுதி சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.