பிரதமர் மோடியின் பிறந்தநாளே உண்மையான சமூக நீதி நாள் - எல்.முருகன்

 
L.Murugan

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான இன்றே உண்மையான சமூக நீதிநாள் என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச கடலோர துய்மை தினத்தையொட்டி சென்னையில் கடற்கரைகளின் மாபெரும் தூய்மைப் பணி திட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் முருகன் தொடங்கி வைத்து தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து கடற்கரைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தார். 
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இன்றைக்கு வரலாற்றின் முக்கியமான நாள் சர்வதேச கடலோர துய்மை தினம். நம் பிரதமரின் தூய்மை இந்தியா கனவில் மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கடல் வளம் நமக்கு இயற்கை கொடுத்த வரம். அதனை நாம் சுத்தம் செய்தல் வேண்டும். இது நமது ஒவ்வொருவரின் பொறுப்பு மட்டும் கடமை ஆகும். கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது. கடல்சார் ஏற்றுமதியில கொரோனா காலத்திலும் கூட 32% அதிகம் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார். உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள். பிரதமர் மோடியின் பிறந்த நாளான என்பதால் நாடும்முழுவது இன்று முதல் அக்.,2 வரை சேவை வாரமாக கொண்டாடிகொண்டு இருக்கிறோம். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.