திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்திய எல்.முருகன்

 
l murugan met draupadi

நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அதிக வாக்குகள் பெற்று இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வெற்றிவாகை சூடினார். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 5.77 லட்சம் வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா - 2.61 லட்சம் வாக்குகளும் பெற்றுளனர். திரௌபதி முர்மு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பலரும் திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

draupadi

இந்நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: வாழ்வில் பல கடினமான சூழ்நிலைகளை கடந்து, அத்தகைய சூழ்நிலையிலும் சமூக பணிகள் செய்து, இன்று நம் நாட்டின் குடியரசு தலைவராக வெற்றி பெற்றுள்ள தேசத்தின் தலைமகள் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.