சமூக நீதியின் காவலர் பிரதமர் மோடி- எல்.முருகன்

 
L Murugan

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 

மோடி

விழாவில் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மெய்யநாதன், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல். முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ”தமிழக மக்கள், தமிழர்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். திரெளபதி முர்முவை குடியரசுத்தலைவராக்கிய பிரதமர் மோடி சமூகநீதியின் காவலராக வந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை கொடுத்துவருகிறார். தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்றவர் பிரதமர் மோடி” எனக் கூறினார்.