கொடநாடு கொலை கொள்ளை வழக்கு - ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளரிடம் விசாரணை

 
Kodanadu

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது.  மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

kodanadu estate

இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தற்போது தனிப்படை போலீசார் பூங்குன்றனிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சசிகலா அவரது உறவினர் விவேக் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உள்ளிட்ட 220 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் இன்று பூங்குன்றனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.