கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - இறுதி கட்டத்தை எட்டிய விசாரணை..

 
kodanad

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மனோஜ், சயான் உள்பட 10 பேரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். திரைப்பட பாணியை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறிய இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களால் இந்த வழக்கு மேலும் சிக்கலானது.  இந்த வழக்கை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழுவாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்த வழக்கு தொடர்பாக  250க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, தற்போது மறு விசாரணையும் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.  

kodanad

ஏற்கனவே  முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் 2 முறை விசாரணை நடைபெற்றது.  அத்துடன்  ஜெயலலிதா வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் யாரிடம் சென்றது? இந்த கொள்ளை சம்பவம் எதற்காக, யாருக்காக நடந்தது என்பது குறித்து புதுப்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகி விட்டதால் தடயங்கள் அனைத்தையும் அழித்து விட்டதாக கூறப்படுகிறது.  ஆகையால் ஆவணங்கள், ஆதாரங்களை  திரட்டும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

kodanad case

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக தனபால், ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தலைவாசல் வனத்துறை விடுதியில் முகாமிட்டுள்ளா ஐஜி சுதாகர்,   நேற்று  மாலை   ஜெயலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் உறவினரான ஆத்தூர் வடக்குகாடு சக்திநகரில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு வந்தார். அங்கு அவரது மனைவி சித்ரா, தாய் சரசு மற்றும் தந்தையிடம் சுமார் 1 மணி நேரம்  விசாரணை நடத்தினார்.  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.