கொடநாடு வழக்கு- 7 மணி நேரத்துக்கு மேல் அதிமுக பிரமுகரிடம் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக 7 மணி நேரத்திற்கு மேல் அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர், போலிசார் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர், அதனை தொடர்ந்து தற்போது அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் சம்பவம் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி விட்டு சயானின் கூட்டாளிகளான ஜம்சர் அலி, ஜித்தன் ராய் , குட்டிசன் , உள்ளிட்ட 8 பேர் கூடலூர் வழியாக கேரளாவிற்கு தப்பி சென்றனர். அவர்களை 24ந் தேதி அதிகாலை கூடலூர் போலீசார் வழிமறித்து வாகன சோதனை ஈடுபட்டனர். மேலும் அவர்களை கூடலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அதன் பிறகு கூடலூரை சேர்ந்த சாஜி என்பவரது உறவினர் ஜித்தின் ராய் என்பதால் அவர்கள் தவறான தகவல்களை கூறியதால் கூடலூரை சேர்ந்த சாஜி, அனிஷ் இருவரும் காவல்நிலையம் சென்று காவல்துறையினரிடம் பேசி அவர்கள் கேரளவிற்கு செல்ல காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே நீலகிரி போலிசார் உதகையில் வைத்து விசாரனை செய்த நிலையில் அது சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக இன்று சிபிசிஐடி போலீசார் கூடலூர் நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான பயணியர் விடுதியில் இன்றய தினம் விசாரனை 7 மணிநேராக விசாரனை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த காவல்துறையினர், மற்றும் அவர்களுக்கு உதவி செய்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அன்றைய தினம் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் வாசு, காவலர்கள் தாஜுதீன், காவல்துறை வாகன ஓட்டுநர் நசீர் உட்பட மொத்தம் ஐந்து பேரிடம் ஏழு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டனர்.
விசாரணை அதிகாரியான சிபிசிஐடி ஏடிஎஸ்பி. முருகவேல் , டி எஸ் பி சந்திரசேகர் தலைமையில் இந்த விசாரணையானது ஏழு மணி நேரம் நடைபெற்ற முடிவடைந்தது.