மண்டியிட்ட RNரவி -ஏன் இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகுது?

 
ர்ச்

#மண்டியிட்ட_RNரவி  என்ற ஹேஷ்டேக் டுவிட்டரின் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்த  ஹேஷ்டேக் டிரெண்டாகுது.

ட்

தமிழ்நாடு சர்ச்சை குறித்த் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்திருக்கிறார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   ’’2023 ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நிறைவடைந்த காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ் சங்கமும் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 அந்த நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றி பேசும்போது காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தை வார்த்தையே பயன்படுத்தினேன் அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.   எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன் .

ந்

எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது,  அனுமானம் செய்து கொள்வது தவறானது.  மற்றும் எதார்த்தத்திற்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாத பொருளாகி இருக்கிறது.  அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று கூறி இருக்கிறார்.

 இதனால்தான்,   #மண்டியிட்ட_RNரவி  என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது.

இதற்குக்,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாடும், ஜனநாயக சக்திகளின் பங்களிப்பும் தான் ஆளுநரின் தெளிவுக்கும் பின்வாங்குதலுக்கும் காரணம்!! தமிழ்நாடு வாழ்க!! என்று கூறி இருக்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.