சென்னை: சாலையில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தை கடத்தல்- 2 மணிநேரத்தில் மீட்பு

 
child

சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை கடத்தப்பட்டது.

kidnap

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத், இவரது (வயது 4) பெண்குழந்தை வர்ஷா இன்று மாலை வீட்டு வாசலில் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக ஆட்டோவில் வந்த மர்மநபர் பிஸ்கட் கொடுத்து  குழந்தையை  கடத்திச் சென்றுள்ளார். குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் உடனடியாக தாம்பரம் காவல் ஆணையரகம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உசார்நிலைப்படு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை செய்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் எம்.ஐ.டி மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே காவல்துறையினருக்கு தகவல் வந்ததால் ஆட்டோக்களை தீவிரமாக தேடிவந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்து ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவிலும் குழந்தை இருப்பது தெரியவந்தது அதன் பிறகு ஆட்டோஓட்டுநரை கைது செய்து குழந்தையை மீட்டு சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் சம்சுதீன் என்கிற குற்றவாளியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனத்தை சேர்ந்தவர் என்பதும், பம்மல் நாகல்கேணியில் தங்கி ஆட்டோ ஓட்டிவந்ததாகவும் இவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.