கேரள நரபலி :பத்மாவின் உடல் பாகங்கள் தர்மபுரியில் நல்லடக்கம்

 
p

கேரள மாநிலத்தில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பத்மாவின் உடல் பாகங்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

 தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து லாட்டரி சீட்டு விற்று வந்திருக்கிறார்.   இவர் காணாமல் போனதாக பத்தனம் திட்டா போலீசில் பத்மாவின் மகன் புகார் அளித்திருக்கிறார்.  போலீசாரின் விசாரணையில் கொச்சி காலடி பகுதியைச் சேர்ந்த லாட்டரி சீட்டு விற்று வந்த ரோஸ்லி என்ற பெண்ணும் காணாமல் போனதாக புகார் வந்திருக்கிறது. 

na

 இரண்டு பேரின் செல்போன் சிக்னல்களும் பத்தனம் திட்டா அடுத்த இலந்தூர் பகுதியைச் சேர்ந்த பகவல்சிங் -லைலா தம்பதியின் வீட்டில் காட்டி இருக்கிறது.  பின்பு நடந்த விசாரணையில் இருவரையும் நரபலி கொடுத்த தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.  இரண்டு பெண்களையும் கொடூரமாக வெட்டி நரபலி கொடுத்ததோடு உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்டு மிச்ச பாகங்களை விற்பனைக்காக வைத்திருந்ததாகவும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

 பத்மாவின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததாலும் டி. என். ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருந்ததாலும் உறவினர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.    இறுதி கட்ட விசாரணை டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு பின்னர் பத்மாவின் உடல்பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.   இதை அடுத்து சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்திற்கு  கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.