என்னை நானே செருப்பால அடிச்சுக்கணும்- கஸ்தூரி

 
Actress Kasthuri’s hilarious tweet on Rajinikanth’s delayed political entry

பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் செல்போனில் பேசினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசினர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆடியோ விவகாரம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் டெய்சி ஆகியோரிடம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ய்சி, “எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டோம். தம்பி போலத்தான் சூர்யா சிவா இதனை பெரிதுபடுத்த வேண்டும்.  இதுகுறித்து தலைவர் அண்ணாமலை என்னிடம் பேசினார். இனிமேல் இதுபோல் நடக்க கூடாது என என்னிடம் அண்ணாமலை உறுதி வாங்கிக்கொண்டார். முறையாக கூப்பிட்டு விசாரித்தனர். மற்ற கட்சியில் உள்ள தலைவர்களும் இதுபோன்று பேசி உள்ளனர். இது ஒன்றும் புதிது இல்ல” என்றார்.


இதுகுறித்து டிவிட்டரில் விமர்சித்துள்ள கஸ்தூரி, “என்னது தம்பியா ?! அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. 
அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. டெய்சிக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே..🩴இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.