காரைக்கால் மாணவர் இறப்பு விவகாரம்: விரிவான விசாரணைக்கு மருத்துவ குழுவை அமைத்தது புதுவை அரசு..

 
காரைக்கால் மாணவர் இறப்பு விவகாரம்: விரிவான விசாரணைக்கு மருத்துவ குழுவை அமைத்தது புதுவை அரசு..

காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்து உயிரிழந்த சிறுவனின் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த  3 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது  புதுச்சேரி அரசு.

காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலமணிகண்டன் படிப்பிலும், கலை நிகழ்ச்சிகளிலும் முதலிடம் பிடித்து வந்துள்ளார்.   இதனால் அவர்  மீது பொறாமை கொண்ட  சகமாணவியின் தாய், குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை மாணவனின் உறவினர் கொடுத்ததாகச் சொல்லி வாட்ச்மேனிடம் கொடுத்துள்ளார்.   அதனைக் குடித்த சிறுவன், வீட்டிற்குச் சென்று பலமுறை வாந்தி எடுத்துள்ளார்.  பின்னர் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் உடனடியாக  அரசு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர். 

காரைக்கால் மாணவர் இறப்பு விவகாரம்: விரிவான விசாரணைக்கு மருத்துவ குழுவை அமைத்தது புதுவை அரசு..

இருப்பினும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   ஆனால் மருத்துவமனையின் அலட்சிய போக்காலேயே மாணவி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் சிறுவனின் இறப்பு குறித்து விசாரிக்க குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் ரமேஷ், பாலசந்திரர் அடங்கிய குழுவை புதுச்சேரி அரசு  அமைத்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள்  முதற்கட்டமாக   காரைக்கால் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் இருந்து  விசாரணையை  தொடங்கினர். 

காரைக்கால்

மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட  போது,  பணியில் இருந்த  மருத்துவர்கள் எந்த மாதிரியான சிகிச்சை அளித்தார்கள்?  என்ன  மருந்துகள் கொடுக்கப்பட்டது? மாணவனை உடனடியாக வீட்டிற்கு அனுப்பியது ஏன் ? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.  அதுமட்டுமின்றி ,  அங்கு பணியில் இருந்த மருத்துவரையும் விசாரித்துள்ளனர்.  தொடர்ந்து மாணவனின் மருத்துவ ஆவணங்களையும், மாணவனின் உடற்கூறாய்வு ஆவணங்களையும் ஆய்வு செய்த அவர்கள்  இதுகுறித்த அறிக்கையை இன்று மாலை புதுச்சேரி மருத்துவத்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிகிறது.