கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

 
rain school leave

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (02.08.2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். 

Live Chennai: Holiday declared for schools in 9 districts due to heavy rain, Holiday for Schools and Colleges in 9 Districts of Tamilnadu, No Holiday  for Kanchipuram, Chennai and Tiruvallur Districts

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குமரி, நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே அதி கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராகி உள்ளது. 

முன்னதாக நாளை தமிழ்நாட்டின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,  விருதுநகர், மதுரை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.