மொழியையும், சாதியையும் இந்த சமூகம் திணித்துக் கொண்டே உள்ளது- கனிமொழி எம்பி

 
kanimozhi

மொழியாக இருந்தாலும் ஜாதியாக இருந்தாலும் தொடர்ந்து இந்த சமூகம் திணித்துக் கொண்டுதான் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Image

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசிஸ் ஜெயின் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 16 & 17வது பட்டமளிப்பு விழாவில்  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு 2019 & 2020 ஆண்டுகளில் துறைவாரியாக முதல் இடம் பெற்ற 12 மாணவ மாணவியருக்கு தங்கப்பதக்கங்களையும் கல்லூரியில் முதலிடம் பிடித்த 44 மாணவர்கள் உள்பட 554 மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., “மொழியாக இருந்தாலும் ஜாதியாக இருந்தாலும் தொடர்ந்து இந்த சமூகம் திணித்துக் கொண்டுதான் இருக்கும். பல்வேறு விதமான போராட்டங்களுக்குப் பின்பு தான் அனைத்து ஜாதியினரும் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தெருவில் இறங்கி போரடிய பிறகு தான் நாம் இந்த நிலை அடைந்த இருக்கிறோம். மிகப்பெரிய சட்டப் போராட்டங்களுக்கு பிறகு தான் பெண்களுக்கு கல்வி உரிமை கிடைத்தது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலையில் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எதையும் வென்று காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்” எனக் கூறினார்.