கமலுக்கு கனிமொழி, அமைச்சர் சக்கரபாணி சொன்ன வாழ்த்து

 
kக்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின்  பிறந்த தினத்தினை முன்னிட்டு  இன்று முதல்வர் ஸ்டாலின், தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும்,  மக்கள் நீதி மய்யம்  கட்சியின் தலைவருமான அன்புத்தோழர்  கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.  கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!என்று வாழ்த்துக்கள் கூறியிருந்தார்.


அதைத்தொடர்ந்து  தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,  ‘’நடிப்பாற்றலில் நிகரற்ற இடத்தை ஆட்கொண்டு, தேசம் போற்றும் சிறந்த கலைஞராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  வளமான ஆரோக்கியத்துடன், மேலும் பல சிறப்பான படைப்புகளை கலையுலகிற்கு தொடர்ந்து வழங்கிட வாழ்த்துகள்’’என்று கூறியுள்ளார்.


திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி,  ‘’தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான திரு.  கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’’என்று தெரிவித்துள்ளார்.