பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு - கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்!!

 
kanal kannan

பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று பேசிய கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

kanal-kannan-33

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவை ஒட்டி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை மதுரவாயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  அக்கட்சியின் கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும் , திரைப்பட ஸ்டண்ட் கலைஞருமான கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் அன்றைய நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறினார். இது தொடர்பாக பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து , புதுச்சேரியில் பதுங்கி இருந்த கனல் கண்ணனை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து  நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது .இதையடுத்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

kanal kannan

இந்நிலையில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சினிமா ஸ்டண்ட்  மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.  இனி இதுபோன்று பேச மாட்டேன் என்று பிராமண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நான்கு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.