கனல் கண்ணன் தலைமறைவு! வீட்டைச்சுற்றி போலீஸ் கண்காணிப்பு

 
k

கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றிருந்த நேரத்தில் அவர் தலைமறைவாகி இருக்கிறார். இதனால் அவரது வீடு உள்ளிட்ட இடங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.  

  இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் என்ற தலைப்பில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நடந்து வந்தது.  கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் இந்த பிரச்சார பயணம் நிறைவடைந்தது.   இதை முன்னிட்டு சென்னை மதுரை வாயலில் பிரச்சாரப்  பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் நடந்தது.

kk

 இந்த கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவர் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பங்கேற்று பேசினார் .  அப்போது  அவர்,  ’’இன்று இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா என்று சொல்கிறார்கள் .  உண்மை அதுவல்ல இன்று தான் தொடக்க விழா.  எப்படி சொல்கிறேன் என்றால் சீரங்கநாதனை கும்பிடுவதற்காக ஸ்ரீரங்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் கோயிலுக்கு போய் வருகிறார்கள்.  ஆனால் அந்த கோவிலுக்கு எதிரே கடவுள் இல்லை என்று  சொன்னவரின் சிலை இருக்கிறது.  அது என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் நம் இந்துக்களின் எழுச்சி நாள்’’ என்று சொன்னார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

மத மத வெறியை தூண்டும் வகையில் பேசி இருக்கும் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் . உடைக்க சொல்லி இருக்கும் இந்த நடிகரை கைது செய்யுமா என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்திருந்தனர்.  அந்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது,  கலகம் செய்யத் தூண்டுதல் , அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது  என்று தகவல்.

இதை அடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் பரவுகிறது.   கனல் கண்ணனை கைது செய்வதற்காக சென்னை மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்பட மூன்று இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என்று தகவல் பரவுகிறது.