பின்லேடனும் பொறியாளர் தான் - கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

 
kamalhasan-34

தேர்தலின் போது வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற தவறியவர்களுக்கு கேள்வி கேட்கும் அருகதை இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நீட்பீஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: 
அரசியல் என்பது உங்கள் கடமை; அது தொழில் அல்ல.ஓட்டளிக்கும் வயது வந்தும் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் கூட சேர்க்காமல் உள்ளனர். ஓட்டளிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்றவில்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை. ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கடமையை நாம் செய்யாவிட்டால் ஜனநாயகம் என நம்பிக் கொண்டிருக்கும் பலம் திருடர்கள் கையில் தான் இருக்கும். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இங்கு படிக்கும் அனைவரும் ஆக்கப்பூர்வமான பொறியாளராக உருவாக வேண்டும். பின்லேடனும் பொறியாளர் தான்; ஆனால் அவர் அழிக்கும் பொறியாளர். அதுபோல் இல்லாமல் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பட வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.