"உடல்நிலை நன்றாக உள்ளது”- கமல்ஹாசன்

 
 3ம் ஆண்டில் தடம் பதிக்கும்  நம்மவர் தொழிற்சங்க பேரவை  - கமல் வாழ்த்து..

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் கமல்ஹாசன் சென்னை நந்தம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

Image


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக உள்ள "டிஎஸ்பி" திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமலஹாசன், “டிஎஸ்பி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். படத்தின் டிரெய்லரை பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது. முன்பெல்லாம் பெரிய விபத்துக்கள் நடக்கும் பொழுது கூட எப்போது சூட்டிங் வருவீர்கள் என்று கேட்பார்கள், அடுத்த படம் எப்போது ரிலீஸ் என்று கேட்பார்கள் தற்போது சின்ன இருமல் என்றால் கூட எனக்கு பெரிய செய்திகள் எல்லாம் வந்து கொண்டு உள்ளது. அதற்குக் காரணம் ஊடகங்கள் மத்தியில் பெருகி இருக்கும் அன்பு என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றி. உடல்நிலை நன்றாக உள்ளது, இந்தியன் 2 அடுத்த கட்ட படப்பிடிப்பு தயாராகி  கொண்டிருக்கிறது” என்றார்.