கமலாத்தாள் பாட்டிக்கு மேடையில் கிடைத்த அங்கீகாரம்!!

 
ttn

கமலாத்தாள் பாட்டி தலைமையில் முதல்வர் ஸ்டாலின்  கல்விப் புரட்சி என்ற புத்தகத்தை வெளியிட்டார். 

ttn

கோவை ஆலந்துறை அடுத்த  வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்று அங்கு உள்ளவர்களால் அழைக்கப்படுகிறார்.  25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்ய தொடங்கிய கமலாத்தாள் பாட்டி விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார்.  ஹோட்டல்களில் ஒரு இட்லி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்  ஏழை, எளிய மக்களின் பசியாற வேண்டும் என்று நோக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியும், சாம்பார், சட்னி ஆகியவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகிறார். இட்லி பாட்டி என்று சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாக மாறிய ககமலாத்தாள் பாட்டிக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

tn

இந்நிலையில் கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதலமைச்சரின் மு க ஸ்டாலின் இன்று கௌரவித்தார்.  ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சியின் நூலும் கமலாத்தாள் பாட்டிக்கு முதல்வரால் வழங்கப்பட்டது. ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு  ‘ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி’ என்ற ஆவணப் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் ஸ்டாலின் கமலாத்தாள் பாட்டிக்கு வழங்கி அவரை நெகிழ்ச்சி கொள்ள செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதாஜீவன்,ஏ.வ. வேலு  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.