சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த ஆசை - கமல்ஹாசன்..

 
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த ஆசை  - கமல்ஹாசன்..


சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற  ராகுல்காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரையில், கடந்த டிசம்பர் 24ம் தேதி கமல்ஹாசன் கலந்துகொண்டார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏராளமனோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக சென்னை அடையாறில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  

ராகுல் காந்தி, கமல் ஹாசன்

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், “மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சென்னையில் ஜல்லிக்கட்டு நடந்த திட்டமிட்டுள்ளோம்; அதற்கான இடம் விரைவில் அறிவிக்கப்படும். சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அனுமதி பெறுவதற்கு முயன்று வருகிறோம். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். ஜல்லிக்கட்டின் அருமையையும், பெருமையையும் நகரத்தில் வசிப்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு

பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதை நாம் எதிர்க்க வேண்டும். மத அரசியலை தடுக்க வேண்டும்.  ஒற்றுமையை நிலைநாட்ட ராகுலின் பாதயாத்திரை அமைந்துள்ளது. தலைமை பொறுப்பில் உள்ள நான் ‘ஏ’ சொன்னால் நீங்கள் ‘ஏ’ சொல்ல வேண்டும்; என்னை பின்பற்றுங்கள்” என்று தெரிவித்தார்.