கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

 
k

நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .  அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

kw

 வழக்கமான பரிசோதனைக்காகத் தான் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் என்றும்,  மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொன்னதால் மருத்துவமனையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கமல்ஹாசன் தரப்பில் இருந்து தகவல்.  நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர்.

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடரில் பங்கேற்று வரும் கமல்ஹாசன்,  இந்தியன்- 2 படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.  தவிர மக்கள் நீதி மையம் கட்சி பணியிலும் தொடர்கிறார்.

 இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் சென்றிருந்த கமல்ஹாசன்,  இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்து உள்ளார்.  அங்கு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நேற்று மதியம் சென்னை திரும்பி இருக்கிறார்.  மதியம் சென்னை திரும்பி இருக்கும் நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது .   இதை அடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.