கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு : பெற்றோருடன் இணைந்து சிபிஎம் தொடர்ந்து போராடும்.. - கே.பாலகிருஷ்ணன்..

 
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு :  பெற்றோருடன் இணைந்து சிபிஎம் தொடர்ந்து போராடும்..  - கே.பாலகிருஷ்ணன்..

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரம்பு மீறியதாக  உள்ளதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீமதி

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிமன்ற நெறிமுறைகளை மீறி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்திருப்பதாகவும்,  பிணையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்ய தமிழக அரசை  வலியுறுத்துவதாகவும்  கே.பாலகிருஷ்ணன் நேற்று தனது  அறிக்கையின் வாயிலாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று  உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயாரை சந்தித்துப் பேசினார்.   அதனைத்தொடர்ந்து  அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கை முடித்து வைப்பது போலவே உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு :  பெற்றோருடன் இணைந்து சிபிஎம் தொடர்ந்து போராடும்..  - கே.பாலகிருஷ்ணன்..

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தில் பெற்றோருடன் இணைந்து தொடர்ந்து சிபிஎம் போராட இருக்கிறோம். பிணையை ரத்து செய்ய வழக்கறிஞர்களோடு ஆலோசித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆதாரங்கள் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு இருந்தாலும் போலீஸ் விசாரணை இன்னும் முடியவில்லை. விசாரணை நடைபெறும் போது நீதிமன்றமே தற்கொலை தான் என சொல்ல முடியாது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் அளிக்க வருபவர்கள் கூட காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு அச்சப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.