கள்ளக்குறிச்சி கலவரம் - 5 பேரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

 
tn

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக பள்ளி நிர்வாகிகள்   5 பேருக்கு ஒரு நாள் காவல் வழங்கியது கள்ளக்குறிச்சி நீதிமன்றம்.

 

 

tn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. இதனால் பள்ளி சூறையாடப்பட்து,  வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வசம் உள்ளது.  பள்ளியில் நடைபெற்ற  கலவரம் தொடர்பாக  300ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் மாணவி இறப்பு வழக்கில்  பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

arrest
இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த  விவகாரம்  தொடர்பாக  நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  கைதான ஐந்து பேரையும் 24 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில்  சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒரு நாள் விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விசாரணைக்கு பிறகு அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.