கள்ளக்குறிச்சி விவகாரம் - பாக்கெட் சாராயம் கொண்டு தீ ; மாவட்டங்களில் கைது நடவடிக்கை!!

 
tn

கனியாமூர் பள்ளி கலவரத்தில்  பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

tn

கள்ளக்குறிச்சி கனியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில்  இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன் மாணவர்களின் கல்வி சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டதால் கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

tn

இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தில் 350ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 6 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணையில் இறங்கியுள்ளது.

tn

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக வாட்ஸப் மூலம் அழைப்பு விடுத்தவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் பழனி கோகுல், உடுமலைப்பேட்டை வெங்கடேஷ், காங்கேயம் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கனியாமூர் பள்ளி கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் வீடியோ வெளியாகி உள்ளது.  பள்ளி கட்டிடங்கள் , காவலர்கள் பேருந்து உள்ளிட்டவை பாக்கெட்  சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.