கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் - சிறப்பு புலனாய்வுக்குழுவினரால் இளைஞர் கைது!!

 
tn

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர வழக்கில், பாலாஜி என்பவர் சிறப்பு புலனாய்வுக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் -  சிறப்பு புலனாய்வுக்குழுவினரால் இளைஞர் கைது!!

tn

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.அதன்படி வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது பள்ளியின் சொத்துக்களை உடைத்து சேதப்படுத்திய கள்ளக்குறிச்சி சின்னசேலம் தாலுக்காவை சேர்ந்த பாலாஜி என்பவரை கைது செய்தனர். 

tn

பள்ளியின் சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர்   நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.