திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 
ss

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் அம் மாவட்ட ஆட்சியர்.  இதேபோல் கனமழையின் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளார் மாவட்ட ஆட்சியர். திருச்சி மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது .  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை,  மிக கனமழையும் பெய்து வருகிறது. 

 இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.    அதேபோல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

rr

 சென்னை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 15 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் , மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போலவே மழை பெய்து வரும் நிலையில் அம் மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்று ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன.  13க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.