ராஜீவ் காந்தி கொலை கைதிகளை வைத்து தமிழகத்தில் அரசியல் நடக்கிறது - கே.எஸ்.அழகிரி பேச்சு

 
ks alagiri

ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களை மக்கள் ஆதரிக்கவில்லை, ஆனால் சில கட்சிகள் இதை மையமாக வைத்து அரசியல் செய்கின்றன என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தவிற மற்ற அனைத்து கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

ks alagiri

இந்நிலையில், இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராஜீவ் காந்தி கொலை கைதிகள் விடுதலையை யாரும் ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கு மக்கள ஆதரவு கிடையாது. அதுபோல ராஜீவை படுகொலை செய்தவர்களையும் மக்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் சில கட்சிகள் இதை மையமாக வைத்து அரசியல் செய்கின்றன. அத்தகைய கட்சிகள் இந்த பிரச்சினையை வைத்து தேர்தல் களத்தில் நின்றதாக வரலாறு கிடையாது. எதிர் காலத்தில் இந்த விவகாரத்தை வைத்து தேர்தலில் ஜெயிக்க முடியாது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஒரு கூட்டணியில் இருப்பதற்காக அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரே கருத்துடன் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.  மதச் சார்பின்மை என்ற ஒற்றை தன்மையில் கூட்டணி தற்போது அமைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.