மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் சசிகலாவின் எண்ணம் தோற்கடிக்கப்படும்- கேபி முனுசாமி

 
KP Munusamy

கட்சியில் மற்றும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் சசிகலா போன்றவர்களின் எண்ணம் தோற்கடிக்கப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

ஓ.பி.எஸ்-ஸுடன் அரசியலில் பயணித்ததை நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது" -  கே.பி.முனுசாமி காட்டம் |AIADMK sub coordinator k.p. munusamy slams OPS in  his remarks

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒசூர் மாநகராட்சி, மின்வாரிய அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்பு அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “ஆ.ராசாவின் பேச்சு பிறரின் மனதை புண்படுத்தும்படி, பிறரின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. குழந்தைகளுக்கு உணவு அளிப்பது வரவேற்கலாம் ஆனால் ஆத்மார்த்தமாக இதனை மு.க.ஸ்டாலின் செய்தாரா என்றால் இல்லை. அம்மாவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற ஆதங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என கங்கனம் கட்டிக்கொண்டுள்ள ஒரு கூட்டம் தூண்டுதலின் பேரில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுப்போன்ற குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் சசிகலா உள்ளிட்டோரின் முயற்சி தேற்கடிக்கப்படும்” எனக் கூறினார்.