சூர்யா சிவாவை கைது செய்யக்கோரி கே.என்.நேரு ஆதரவாளர்கள் ஐஜி அலுவலகத்தில் புகார்

 
sk

திருச்சி சிவாவின் மகனும், பாஜக பிரமுகருமான சூர்யா சிவாவை கைது செய்யக்கோரி அமைச்சர் கேஎன் நேருவின் ஆதரவாளர்கள் போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா அண்மையில் பாஜகவில் இணைந்தார்.  பாஜகவில் முக்கிய பொறுப்பு வைத்து வரும் சூர்யா சிவா மீது   அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

d

 திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருண் சார்பில் இந்த புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது .  அந்த புகார் மனுவில் , பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா சமூக வலைதளத்தில் அமைச்சர் கே என் நேருவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் பேசி இருக்கிறார் .  ராமஜெயம் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அந்த வழக்கு குறித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் பேசியிருக்கிறார் சூர்யா சிவா.  அவர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் .  

அமைச்சரின் அமைச்சர் கே என் நேருவின் திறமையை குறைக்கின்ற விதமாகவும் பேசி வருகிறார்.  அவர் மீது ஏற்கனவே பஸ் கடத்தல் வழக்கு பணம் மோசடி வழக்கு நிலைமையில் இருக்கின்றன.  இந்த நிலையில் அவர் அமைச்சர் கே என் நேரு விவகாரத்திலும்,  ராமஜெயம் கொலை வழக்கிலும் அவதூறாக பேசி வருவதால் சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி இருக்கிறார்.