’ஒன்றியம்’ பொருள் தெரியாதா? தமிழை நீங்கள் கற்கும் லட்சணம் இதுதானா? ஆளுநருக்கு கி.வீரமணி கேள்வி

 
k veeramani

ஒன்றியம் என்பதற்கு சரியான பொருள் தெரியாத ஆளுநர் இரவியே! தமிழ் மொழியை அரைகுறை ஆசாமிகளிடம்- நீங்கள் கற்கும் லட்சணம் இதுதானா? பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு இலச் சினையை  புறக்கணித்துள்ளார் ஆளுநர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அடுக்கடுக்காக சாடியுள்ளார். 

K veeramani

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஒன்றியம் என்பது உயர்ந்த படிநிலை கொண்ட வார்த்தைதான். நான் கூட யூனியன் கவர்மெண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். தமிழ்நாட்டில் ஒன்றியம் என்பது வேறு விதமாக மொழி பெயர்க்கப்பட்டு அரசியல் ரீதியாக பயன்படுத்தப்படுகிறது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு என்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு என்று கூறுவது கூடாதாம்!''The Word 'ஒன்றியம்' Referred to a sub-district, sub-divisional level structure in the hierarchy and was used for the Union government perhaps with an intention to “belittle” and be “disrespectful” to the Union government.'' என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள். எப்படிச் சிரிப்பது என்றே தெரியவில்லை! Union Government என்ற சொல்லுக்குச் சரியான தமிழ்மொழி பெயர்ப்பு  'ஒன்றிய அரசு' என்பதே!

'மத்திய அரசு' என்ற சொல், அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பூர்வ சொல் அல்ல.ஆட்சிகளின் அதிகாரப் பகுப்புகளுக்கு மூன்று பட்டியல்களின் தலைப்பு என்ன?
1. ஆளுநர் அரசமைப்புச் சட்டவரலாற்றையும் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது. அரசமைப்புச் சட்டம் இயற்றிய அரசியல் நிர்ணய சபை (Constitutional Assembly) விவாதத்தின்போது, ''Central Government என்ற சொல்லுக்குப் பதிலாக Union Government என்ற சொற்றொடரைப் போடவேண்டும்; காரணம், சென்ட்ரல் கவர்ன்மெண்ட்  (Central Government) என்றால் ''மத்திய அதிகாரக் குவிப்பு'' என்ற பொருள் வந்துவிடக் கூடும். அதைத் தவிர்க்கவே 'ஒன்றிய அரசு'  (Union Government) என்ற சொல்லாக்கம் இடம்பெற்றது'' என்ற பழைய வரலாற்று நிகழ்வு இன்றைய 'இந்து' ஆங்கில நாளேட்டிலும் வெளிவந்துள்ளது.

திட்டமிட்ட பின்னணியோடு வம்பு வளர்ப்பதற்காகவே - பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த ஆளுநர் இரவி, அந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசினைப் புறக்கணித்துள்ளார். இது வேண்டாத வேலை அல்லவா?
இவர் எங்கே கவர்னர்? தமிழ்நாட்டுக்குத்தானே! இவர் எந்த அரசின் நிதியிலிருந்து ஊதியம் வாங்குகிறார்? எங்கே குடியிருக்கிறார்? டில்லியிலா? அதுமட்டுமா?

2. Union List  - ஒன்றிய அரசு பட்டியல் என்றுதான் குறிப்பிட்டுள்ளது. Central List என்று அல்ல என்பதை ஆளுநர் படித்துப் புரிந்து கொள்ளட்டும்! ஒன்றியம் என்றால், அவருக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள் 'Panchayat Union' என்ற சொல்லை நினைத்துக்கொண்டு பாடத்தைத் தவறாகச் சொல்லிக் கொடுத்து, இவரும் அது புரியாமல் இப்படி குறுக்குச்சால் ஓட்டுகிறார்! இவர் இப்போது பிரச்சாரம் செய்யும் சனா தனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க கர்த்தாவான எம்.எஸ்.கோல் வால்கர் 'Bunch of Thoughts' நூலில் 'ஞானகங்கை' என்ற தலைப்பிட்டு, வெளியிடப்பட்டிருப்பதிலே ''ஒன்றிய அரசு'' என்ற சொல் முன்பே இடம்பெற் றுள்ளது- அதுவும் பிரிவினை எண்ணத்தோடு தானா?
எனவே, ஓநாய் - ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்தபோது, ஓநாய் குற்றச்சாட்டு கதைபோல இப்படி உளறாதீர்! தமிழ் மொழியை அரைகுறையாக கற்று பேட்டி கொடுத்துக் கேலிக்கு ஆளாகியதை எண்ணி, தமிழ் நாட்டு மக்கள் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? அடுத்தடுத்து சர்ச்சை நாயகனாக மாறி, தமிழ் நாடு அரசினையும், தமிழ்நாட்டு மக்களையும் தூண்டுகிறாரா? சந்திக்கத் தயாராவோம்! தயாராவோம்!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.