ஸ்ரீமதி மரணம்- வழக்கை முடித்துவைப்பதிலேயே நீதிமன்றம் குறியாக உள்ளது:கே. பாலகிருஷ்ணன்

 
cpm

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் பிணையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில்தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் சிபிஐ(எம்) சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அறிக்கையின் வாயிலாக வலியுறுத்திய நிலையில் ஸ்ரீமதியின் தாயாரை இன்று அவர் நேரில் சந்தித்தார். 

cpm

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு  உயர்நீதிமன்றம் பிணை வழங்கியதை கண்டித்து  ஶ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளனர். நீதிமன்றம் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வழக்கை முடித்து வைப்பது போலவே உள்ளது. பள்ளியின் நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ள பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் பெற்றோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தில் பெற்றோருடன் இணைந்து தொடர்ந்து சிபிஎம் போராட இருக்கிறோம். மாணவியின் பெற்றோருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

நீதிமன்றம் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வழக்கை முடித்து வைப்பது போலவே உள்ளது. வழக்கு விசாரணையில் உள்ள பொது நீதிமன்றம் எவ்வாறு இப்படி ஒரு தீர்ப்பை வழங்க முடியும் என்று தெரியவில்லை. ஆதாரங்கள் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு இருந்தாலும் காவல்துறை விசாரணை இன்னும் முடியவில்லை. விசாரணை நடைபெறும் போது நீதிமன்றமே  தற்கொலைதான் என சொல்ல முடியாது. கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் அளிக்க வருபவர்கள் கூட காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு அச்சப்படுகின்றனர்” எனக் கூறினார்.