சேது சமுத்திர திட்ட தீர்மானம் நிறைவேற்றம் - முதலமைச்சருக்கு கி.வீரமணி பாராட்டு

 
k veeramani

தமிழக சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்ட தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி கொடுத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக  திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கிட்டுவதற்கான திட்டமுமான சேது சமுத்திர கால்வாய் திட்டம் என்பது கடந்த 150 ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கிய திட்டமாகும். இத்திட்டம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் முற்போக்கு கட்சிகள் அனைத்தும் வற்புறுத்தி வந்த திட்டமாகும். 

மீண்டும் அந்த திட்டத்தை நிறைவேற்றி முடிக்க எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவர நமது முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தோம். சட்டமன்றத்தில் முதலமைச்சரால் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி கொடுத்ததற்கு முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்