உச்சநீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையில் அமையும் - நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி..

 
 உச்சநீதிமன்றத்தின்  கிளை விரைவில் சென்னையில் அமையும் - நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி..
 உச்சநீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையில் அமையும் என்று எதிர்பார்ப்பதாக  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட  சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் ரூ. 315 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்களும் புதுப்பிக்கப்பட உள்ளன.   இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை  உயர்நீதிமன்ற வளாகத்தில்  நடைபெற்று வருகிறது.  இதில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  மேலும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள்  எஸ்.கே.கவுல், இந்திரா பானர்ஜி  ராம சுப்பிரமணிடம், சுந்தரேஷ், சென்னை  உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல்  அமைச்சர்கள் எ.வெ.வேலு,  ரகுபதி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.  

 உச்சநீதிமன்றத்தின்  கிளை விரைவில் சென்னையில் அமையும் - நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி..

இந்த நிகழ்ச்சியில் பேசிய  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி,  உயர்நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாட்டுக்காக ஒத்துழைக்கும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.  மேலும், எங்கள் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்ற  உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷல் கவுல், இந்திரா பானர்ஜி, ராமசுப்ரமணியன், சுந்தரேஷ் ஆகியோருக்கும்,  அமைச்சர்களுக்கும்  நன்றி தெரிவித்தார்.  

Highcourt

தொடர்ந்து பேசிய அவர்,  புதிய கட்டடம் கட்ட ரூ.500 கோடி மதிப்பிலான இடத்தை முதலமைச்சர் தந்துள்ளதாகவும்,   புதிய கட்டடத்தில் 160 நீதிமன்ற அறைகள் கட்டப்பட  இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பாரம்பரிய சட்டக் கல்லூரி கட்டடமனது  நீதிபதி  சஞ்சய் கிஷன் கவுல் முயற்சியால் உயர்நீதிமன்றத்துக்கு ஒதுக்கித்தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்,   பாரம்பரியமிக்க பழைய சட்டக் கல்லூரி கட்டடம், புதுப்பிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.   உச்சநீதிமன்ற மதுரைக்கிளை சென்னையில் அமையவேண்டும் என்று முதலமைச்சர்  கூறியதை சுட்டிக்காட்டி அனைவரின் விருப்பமுமாக இருக்கும்  உச்சநீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையும் அமையும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.