விசாரணைக்கு பின் பத்திரிக்கையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிப்பு

 
savithri kannan

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணைக்கு பின் பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். 

journalist Savithri kannan arrest kallakurichy


தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் அவர்கள், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் சந்தேக மரணம் மற்றும் அது தொடர்பான விசாரணை ஆகியவற்றில் உள்ள பல்வேறு ஐயங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதிவந்த நிலையில், இன்று மதியம் சைபர் க்ரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கருத்துரிமையை பறிக்கும் தமிழக காவல்துறையின் இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுப்பது சட்ட நடைமுறைக்கு எதிரானது கிடையாது என்றும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவந்தனர். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணைக்கு பின் பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். சைபர் கிரைம் காவல்துறை சென்னையில் இருந்து விசாரணைக்காக பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் ஒலக்கூர் அழைத்துச்சென்றது. ஒலக்கூரில் விசாரணைக்கு பின் சைபர் கிரைம் காவல்துறை பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை விடுவித்தது.