பிறக்கும் குழந்தை குடிக்கும் பாலில் இருந்து எரிக்கும் இடுகாடு வரை ஜி.எஸ்.டி! கொதித்தெழுந்த ஜோதிமணி

 
mp

அவையில் இருந்து நீக்கம் செய்வதற்கு எல்லாம் நாங்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டோம் என்றும், மக்களுக்காக குரல் கொடுக்கும் போது நீக்கம் செய்தால் அவை எங்களுக்கு பெருமை தான் எனவும் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி டெல்லியில் கூட்டாக பேட்டியளித்தனர். 

Congress MP Jothimani Admitted In Hospital | மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட ஜோதிமணி காரணம் என்ன | News in Tamil

மக்களைவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய மாணிக்கம் தாகூர், “விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி அதிகரிப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் விவாதத்திற்கு வர தாயாராக இல்லாத அரசு இன்று எங்களை சஸ்பெண்ட் செய்து உள்ளது, இது ஜனநாயக படுகொலை என்றார். 

தொடர்ந்து பேசிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி,  “கொடுங்கோல் அரசாக ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தை குடிக்கும் பாலில் இருந்து எரிக்கும் இடுகாடு வரை ஜி.எஸ்.டி விதித்து உள்ளனர். சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் முடிவுகளை எடுத்துவிட்டு நாட்டின் 2 பெரும் பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்குகிறது இந்த அரசு! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களுக்காக குரல் எழுப்பினோம் அதற்கு ஆளும் அரசு எங்களை நீக்கம் செய்து உள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் விரோத ஆட்சியை எதிர்த்து போராட வேண்டியது எங்கள் கடமை. அதற்காக எங்களை நீக்கம் செய்தால் அது எங்களுக்கு பெருமை. மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது பதாகை ஏந்திய பாஜக இன்று நாங்கள் பதாகை ஏந்தினால் அதனை அவைக்கு புறம்பான விஷயம் என்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பதாகை ஏந்தக்கூடாது என விதி இருந்தால் அதே விதிப்படி கொடுக்க கூடிய நோட்டீஸ்க்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். ஆனால் அதை மட்டும் ஆளும் அரசு ஒருபோதும் செய்வதில்லை  4 எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைமையிடம் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினார்.