என்.எல்.சியில் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு.. 226 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு..

 
என்.எல்.சி

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில்  பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த பணியிடங்களுக்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்.எல்.சி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் ( www.nlcindia.in) சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மொத்த காலிப்பணியிடங்கள்  - 226

பணி விவரம்  -  பொறியாளர்,  மேலாளர்  

பணியிட விவரம்  -   
அனல் மின் துறையில் எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) - 51 காலியிடங்கள்
எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி), அறிவியல் (மேனேஜர்)-  22 இடங்கள்

சுரங்கத்துறையில் மெக்கானிக்கல் பொறியாளர் (நிர்வாகப் பணி) - 45 காலியிடங்கள்
எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) -  23 இடங்கள்

என்.எல்.சியில் பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு..  226 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு..

புவியியல் துறையில் மேலாளர்  -  2 இடங்கள்  
தொழில் பொறியியல் துறை :  5 இடங்களும் (நிர்வாகப் பணி )
வேதியியல் துறை :  2 இடங்கள்  (நிர்வாகப் பணி )
சிவில் துறை -  1 இடம்

கல்வித்தகுதி  -  மெக்கானிக்கள் எஞ்சினியரிங்,  எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங், சிவில் எஞ்சினியரிங்,   கெமிக்கல் எஞ்சினியரிங், இண்டஸ்ட்ரியல் எஞ்சினியரிங்  மற்றும்  பட்டப்படிப்பு..  

மாத ஊதியம்  -  ரூ. 60,000 - ரூ.  2,00,000/- வரை

வேலைவாய்ப்பு
 
வயது வரம்பு  - அதிகபட்சமாக 36 வயதுக்குள் இருக்க வேண்டும்  

விண்ணப்பிக்க கடைசி தேதி  -  23 செப்டம்பர்  2022

தேர்வு செய்யப்படும் முறை  -  எழுத்துத் தேர்வு மற்றும்  நேர்க்காணல்
 
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க  http://www.nlcindia.in என்கிற முகவரிக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்..