ஜன. 10க்குள் விலையில்லா வேட்டி சேலை.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய டிசைன்களில் வழங்க திட்டம்..

 
ஜன. 10க்குள் விலையில்லா வேட்டி சேலை.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய டிசைன்களில் வழங்க திட்டம்.. 

பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலை வழங்க,  முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  பொங்கல் பண்டிகையின் போது நியாய விலை கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி,  சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. .  இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.  

ஸ்டாலின்

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்காக  ரூ. 243 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1. 80 கோடி பெண்களுக்க்கும் 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கு முன்பாக வழங்கப்பட்ட வேட்டி சேலை போன்ற மாடலில்  இல்லாமல், புதிய  டிசைனில்   மற்றும் தரமான வேட்டி சேலைகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  அதற்காக மாதிரி டிசைன் ( சாம்ப்பிள்) வேட்டி சேலைகள் முதலமைச்சரிடம் காண்பிக்கப்பட்டது. தற்போது அந்த புதிய டிசைன் வேட்டி சேலைகளுக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.  

தமிழக அரசு

இந்நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு புதிய டிசைன்களை அரசு வழங்கும் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும்,   2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்குள் வேட்டி  சேலைகளை வழங்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலைகளை பொறுத்தவரை  15 டிசைன்களிலும் பல வண்ணங்களிலும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது.  இதே போல் ஆண்களுக்கான வேட்டி ஐந்து டிசைன்களில்  வழங்கப்பட இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக  விலையில்லா  வேட்டி சேலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் வழங்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது புதிய டிசைன்கள் மற்றும்  அனைவரும் அணியக் கூடிய வகையில்  அதிக தரத்துடன்  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.