திருச்சி கூத்தப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்

 
jallikattu

திருச்சி மாவட்டம் கூத்தப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு பணிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக மதுரை அலங்காநல்லுர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. 
 
இந்த நிலையில், திருச்சி மாவட்டம் கூத்தப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இதேபோல் 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளை உரிமையாளருக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்ட உள்ளன.