மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி..

 
jallikattu

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டில்  சுமார் 1000 காளைகள், 305 வீரர்கள் களம் காண தயாராகி வருகின்றன.  

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றவையாகும். இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று கோலாகலமாக  நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று ( ஜன16)  பலமேட்டில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி வாடிவாசல், பார்வையாளர்கள் மேடை, பரிசுப்பொருள் மாடம் மற்றும் இரண்டடுக்கு பாதுகாப்பு தடுப்புகள் போன்றவை  தயார் செய்யப்பட்டுள்ளன. அதேபோல்  காளைகளுக்கு வைக்கோல் உணவு, தண்ணீர் தொட்டிகள், பொதுமக்களுக்கு குடிநீர் போன்றவையும்   தயார் நிலையில் உள்ளன. மேலும் பாலமோடு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள சுமார் 1000 காளைகளும், 305 வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்து காத்திருக்கின்றனர்.  

Jallikattu

மேலும் காளைகளைப் பரிசோதனை செய்ய 60 பேர் கொண்ட மருத்துவக் குழுவும், வீரர்களுக்கு 160 பேர் கொண்ட மருத்துவக் குழுவும்  பரிசோதனை பணிகளை செய்து வருகின்றனர்.   மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் உடற் தகுதியுள்ள காளைகளும், வீரர்களும் போட்டியில் களமிறக்கப்படுவர். தொடர்ந்து வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், கட்டில், பீரோ,மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்க: வழங்கப்பட உள்ளன.   

jallikattu

அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடிக்கும் சிறந்த வீரருக்கு கார் பரிசாகவும், அதேபோல்  சிறப்பாக விளையாடி முதல்பரிசு பெறும் காளையின் உரிமையாளருக்கு இரசக்கரவாகனமும், 2 ம்பரிசு பெறும் காளை உரிமையாளருக்கு நாட்டுப்பசுவும், கன்றுக் குட்டியும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பாலமேடு ஜல்லிக்கட்டை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   மேலும் 2 எஸ்.பி க்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஏராளமான பொதுமக்கள் பாலமேட்டில் குவிந்து வருகின்றனர்.