ஜல்லிக்கட்டு போட்டி - இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு

 
Jallikattu

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ,பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகை ஒட்டி கோலகாலமாக நடைபெற உள்ளது.  

jallikattu

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்குள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய  அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தங்கள் பெயர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். madurai.nic.in என்ற இணையதளத்தில் இன்று பகல் 12 மணி முதல் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

thammambatti jallikattu

மாடுபிடி வீரர்கள் கொரோனா தடுப்பூசி சான்று, வயது சான்று, போட்டோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,  ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும். காளையுடன் இருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும்,  இருவரும் இரு தவணை  கொரோனா சான்று பதிவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.