ஜெயின் புனித தலம், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு.. - சென்னையில் 25,000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்..

 
ஜெயின் புனித தலம், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு.. - சென்னையில் 25,000க்கும்  மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.. 
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித தளம், சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்  25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

"ஸ்ரீ சம்மத் ஷிகர்ஜி தீர்த்தம்"  என்னும் ஜைனரது புனித ஆலயம் 500 ஆண்டுகள் பழமையானது.  27 தீர்த்தங்கரர்களில் 24பேர் இங்கு மோட்சம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த புனித தலத்தைச் சுற்றூலாத் தலமாக ஜார்க்கண்ட்  மாநில அரசு அறிவித்துள்ளது.  இதற்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை  பகுதியில் ஜெயின் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.  சுமார் 25,000க்கும் மேற்பட்டோர் திரண்டு பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக  பல்வேறு மாநிலங்களில் இதற்காக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று சென்னையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

ஜெயின் புனித தலம், சுற்றுலாத்தலமாக அறிவிப்பு.. - சென்னையில் 25,000க்கும்  மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.. 

ஜார்க்கண்ட் அரசின் இந்த அறிவிப்புக்கு,  மத்திய அரசு நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும்,  முன்பே அறிவித்த போராட்டம் என்பதாலும், இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது என்பதற்காகவும்  இந்த பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மத் ஷிகிர்ஜா தீர்த்தம் எந்தக் காரணத்தைக் கொண்டும் சுற்றுலாத்தலமாக அறிவிக்க கூடாது என்றும்,   அப்படி அறிவித்தால் எங்களுடைய புனிதம் கெட்டுப் போய்விடும்  என்றும் ஜெயின் சமூக மக்கள் கூறுகின்றனர்