ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு - பூவை ஜெகன் மூர்த்தி..

 
ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு  - பூவை ஜெகன் மூர்த்தி.. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்திருக்கிறார்.  

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில்  வருகிற 27ம் தேதி  இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.  இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் சகோததரர், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகனுமான சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில்  காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அதிமுக சார்பில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 2  அணிகளும் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. 

edappadi palanisamy

இதனையடுத்து இரு அணிகளும்  தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை தனித்தனியே சந்தித்து ஆதரவு கோரி வருகின்றன.  அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பழனிசாமி  அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை சந்தித்து பேசினர்.  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி  ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சின்னையா உள்ளிட்டோர்,  புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளுடன்  சந்தித்து ஆதரவு கோரினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூவை ஜெகன் மூர்த்தி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  எடப்பாடி பழனிசாமிக்கு  ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு அளித்து தேர்தல் பணியில் ஈடுபடுவோம் என்றும்,  ஓ.பி.எஸ் தரப்பில் இருந்தும் ஆதரவு கேட்டனர்; மாலை வருவதாக கூறினார்கள்;  ஒ.பி.எஸ் நேரிடையாக போட்டியிடுவது பற்றி எனக்கு தெரியாது என்றும் கூறினார்.