தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 
protest

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. 

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி காலவரையற்ற முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனே வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு அங்கன்வாடி எம்ஆர்பி செவிலியர் வருவாய் கிராம உதவியாளர் ஊர் புற நூலகர் ஆகியோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்திலும் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஜாக்டோ  ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தேர்தல் கால  ஒன்பது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. அரியலூர் பேருந்து அண்ணா சிலை அருகில் அரசு ஊழியர் கூட்டமைப்பான அரியலூர் மாவட்ட ஜேக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் மாநில தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் நம்பிராஜ் தொடங்கி வைக்க பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.