பட்டியலினத்தவர் வீட்டில் உணவருந்தினார் ஜேபி நட்டா

 
நட்டா காலை சாப்பாடு

இரண்டுநாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர்  ஜெ.பி நட்டா நேற்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்  95சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாஜக தொண்டர் வீட்டில் சாப்பாடு.. 'தமிழ் உணவு'.. ராமலிங்கம் மகனை கூப்பிட்டு  தலையில் 'கை' வைத்த நட்டா! | JP Nadda and executives had breakfast at Mandal  President Ramalingam ...

இதனையடுத்து இன்று காலை பிள்ளையார்பட்டி வந்த ஜேபி நட்டா, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் கோவில் நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் வரவேற்பு அளித்தனர். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கரு நாகராஜன் H. ராஜா, L. முருகன் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காரைக்குடியில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் ஜேபி நட்டா மற்றும் பாஜக தமிழக தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். 

ஆலோசனைக்கு பின் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய பாஜக மண்டல தலைவர் ராமலிங்கம் வீட்டில் காலை உணவு சாப்பிட ஜேபி நட்டா வருகை புரிந்தார். அப்போது அவரது குடும்பத்தினர், நட்டாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பட்டியலினத்தவரான ராமலிங்கம் வீட்டில் நட்டா சாப்பிட்டது பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி, சாப்பிட்டு முடித்த பின்னர் ராமலிங்கம் மகனை அருகில் அழைத்த ஜேபி நட்டா, அவரின் தலையில் கையை வைத்து வாழ்த்தினார்.