அதிமுக அலுவலகம் திறந்தவுடன் ஓபிஎஸ் மீண்டும் அங்கு செல்வார்- ஜேசிடி பிரபாகர்

 
admk office

சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள ஓபன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்ற அவரது ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் - ஐ சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

AIADMK headquarters in Chennai sealed following clash between party members  | India News – India TV

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்.ஆதராவளர் ஜே.சி.டி.பிரபாகர், “லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒபிஎஸ் பக்கம் வந்து கொண்டுள்ளனர். அதனால் எடப்பாடி இனி தினந்தோறும் பல பேரை நீக்க வேண்டிவரும். பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதி என்று எடப்பாடி பழனிச்சாமி புதிய விதிகளை கொண்டுவந்துள்ளார். அடிப்படை உறுப்பினர்கள் தான் பொது செயலாளரை தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர்‌.கூறியுள்ளார் அதனை தற்போது பழனிசாமி மீறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் முறையீடு சென்று கொண்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டால் ஓபிஎஸ் மீண்டும் செல்வார். அது தான் அவரது விருப்பம்.” எனக் கூறினார். 

முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ம் தேதி நடந்த வன்முறையை தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதை ரத்து செய்யக் கோரியும், இந்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை  ஒப்படைக்க கோரியும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.