சென்னையில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும்

 
hr

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 தமிழகத்தில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது.  இன்றும் அந்த பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  தென்கிழக்கு அரபிக் கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியாக நிலவுகின்றது. 

c

 தெற்கு வங்க கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருக்கிறது.   இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.  ஒரு சில இடங்களில் இடி,  மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்திருக்கிறது.