சென்னையில் மீண்டும் மழை தொடங்கியது

 
c

சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.   மயிலாப்பூர், ராயப்பேட்டை, அமைந்தகரை, செனாய் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

rrr

 கடந்த 29ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   நேற்றைய தினமும் நேற்றைய முன் தினமும் சென்னையில் பெய்து வந்த கனமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

 நேற்று இரவிலும் மழை பரவலாக பெய்தது.  இன்று காலையில் மழை இல்லாமல் இருந்தது . இந்த நிலையில் மீண்டும் சென்னையில் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.

சென்னையில் இன்றைய தினம் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும்,    சில இடங்களில் இடி மின்னலுடன் திடீர் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது வானிலை ஆய்வு மையம்.  அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்ய தொடங்கிவிட்டது.