தமிழக ஆளுநரை திரும்பப்பெற கோருவது தேவையற்றது - தமிழிசை சௌந்தரராஜன் கருத்து..

 
tamilisai

தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவியை  திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

புதுச்சேரி காலாப்பட்டு  பல்நோக்கு  சமூக சேவை மையத்தில்,  நேரு இளையோர் மையம் சார்பில்  அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.  இதில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார்.  100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளதாகவும்,  அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.  

ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை  திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது என்றார்.   ஆளுநருக்கு  அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது என்றுகூறிய தமிழிசை, அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால் எதிர் கருத்தைக் கூறலாம், மாறாக  கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல என்றார்.   சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்று தெரிவித்தார்.